சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(65) இவருக்கு திருமணமாகி வித்யா(60) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
பாஸ்கரன் அவரது வீட்டின் முன்பக்கத்தில் ஒரு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். பாஸ்கரனின் இளைய மகன் வாசுதேவன் மதியம் முதல் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்கி கொண்டிருந்திருக்கிறார். தூக்கம் தெளிந்த பின் தனது அம்மாக்கு போன் செய்துள்ளார்.
அம்மா போனை எடுக்காததால் கீழே இறங்கி சென்று பார்த்துள்ளார். அப்போது பாஸ்கரனும் வித்யாவும் ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் தனது அண்ணன் துணையுடன் பாஸ்கரன் மற்றும் வித்யாவை மீட்டுள்ளார் சம்பவ இடத்திலே வித்யா துடிதுடித்து உயிரிழந்த நிலையில் பாஸ்கரனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து வாசுதேவனையும் அவருடைய சகோதரரும் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் போலீசார். இரட்டை கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை கைது செய்தனர்.
சந்தோஷிடம் மேற்கொண்ட விசாரணையில், சந்தோஷிற்கு அதிக கடன் தொல்லை இருந்ததால் அதிலிருந்து தப்பிக்க பாஸ்கர் மற்றும் வித்யாவை கொலை செய்து அவர்களிடமிருந்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையே போலீசார் சந்தோஷிடமிருந்து பாஸ்கருக்கு சொந்தமான 10 தங்க நககைகளை பறிமுதல் செய்துள்ளனர்.