தளபதி விஜய்யின் பிறந்தநாளன்று ரிலீசாகும் படம்..!வெளியானது திரையரங்குகளின் லிஸ்ட் ..!

1057

அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் விஜய்-நயன்தாரா நாயகன் நாயகியாக நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார் தளபதி விஜய். இவர்களுடன் யோகி பாபு, இந்துஜா, கதிர் இன்னும் பலர் நடித்திருந்தனர்.

பெண்கள் கால்பந்தாட்டத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்ட கால்பந்தாட்ட மைதானத்தில் கால்பந்து விளையாட்டு படமாக்கப்பட்டிருக்கிறது.


இந்த படத்திற்கு இசைப்புயல் ரகுமான் இசை அமைக்க அணைத்து பாடல்களும் ஹிட்டானது. குறிப்பாக ஆஸ்கார் நாயகன் குரலில் வெளியான அக்கினி சிறகே பாடல் பலருக்கும் புத்துணர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் மாஸ்டர் படம் வெளிவர காத்திருக்கும் நிலையில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டில் விஜயின் பிகில் திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ் ஆகவுள்ளது.

அண்மையில் பிரான்ஸ் நாட்டில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் வரும் 22ம் தேதி தளபதி பிறந்தநாளன்று பிகில் திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது.