தாயின் இறுதி ஆசை…. ICUவில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் : நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!

672

பீகார்..

பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. இதய நோயாளியான இவருக்கு சாந்தினி (வயது 26) என்ற மகள் உள்ளார்.

அண்மையில் சாந்தினிக்கும்,சேலம்பூர் கிராமத்தில் வசித்து வரும் சுமித் கவுரவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பூனம் குமாரிக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தந்து மகளிடம் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் இது தான் தனது கடைசி ஆசை என்று வலியுறுத்தியுள்ளார்.

இதை ஏற்று இரு குடும்பத்தினரும் சாந்தினி மற்றும் சுமித் கவுரவுக்கு தனியார் மருத்துவமனையிலே திருமணம் செய்து வைத்துள்ளனர்.

பின்னர், சாந்தினி தனது கணவருடன் திருமண கோலத்தில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றார்.

இருவரையும் பார்த்த பூனம் குமாரி மகிழ்ச்சியுடன் இருவரையும் ஆசீர்வாதம் செய்து உயிரிழந்துள்ளார். தனது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள் திருமண கோலத்தில் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.