ஆப்பிரிக்கா….

ஆப்பிரிக்கா, உகாண்டாவில் வசிக்கும் மரியம் நபதன்சி என்ற 40 வயதுப் பெண் ஒருவர் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். அதனால் உகாண்டா மக்களிடையே ‘உகாண்டாவின் தாய்’ என்று அழைக்கப்படுகிறார்.

மரியம் 12 வயதில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மரியத்தின் பெற்றோர் அவளை விற்று விட்டனர். 13 வயதில் இவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து குழந்தைகளைக் பெற்றெடுத்திருக்கிறார். இவருக்கு 44 குழந்தைகள் பிறந்தாலும், அதில் 6 குழந்தைகள் தற்போது உயிரோடு இல்லை.

தற்போது 20 ஆண் குழந்தைகளையும், 18 பெண் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். இவர் தனது பிரசவத்தில் பல குழந்தைகளை பெற்றெடுக்கும் தனித்துவமான உடல் நிலையை கொண்டுள்ளார்.

ஒவ்வொரு முறையும் இரட்டையர்கள், மூவர் என்ற அடிப்படையில் தான் கருவுற்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மரியம் 44 குழந்தைகளையும் பெற்றெடுத்த பின்னர் அவர்களைப் பார்த்துக் கொள்ளாமல் அவரின் கணவன் வீட்டிலிருந்த,

பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். ஆனால் மரியம் இருக்கும் பிள்ளைகளை எல்லாம் இரவு பகல் பாராது அயராமல் உழைத்து வளர்த்து வருகிறார்.















