தாய்லாந்தின் நாகா குகைகள், புவெங் கான் மாகாணத்தின் புவெங் காங் லாங் மாவட்டத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த மர்மமான குகையின் படங்களை பிரம்மாண்டமான பாம்பு தலை வடிவை ஒத்த மற்றொரு மேற்பரப்புடன் இணைத்து பதிவிட்டுள்ளது பலரை வியக்க வைத்துள்ளது.
இந்த குகை “நாகா குகை” எனபெயரிடப்பட்டுள்ளது. ஆர்ட் தனவானிஜ் என்ற பேஸ்புக் பயனர் இந்த குகையின் படத்தை வெளியிட்டார். இது பாறை மேற்பரப்பைக் கொண்டுள்ள இது ஒரு பாம்பின் சுருண்ட உடல் ஒரு பெரிய பாம்பின் செதில்களாக தோற்றமளிக்கிறது.
குறித்த புகைப்படத்தில் பாம்பு செதில்களைப் போலவோ அல்லது கல்லாக மாறிய மாபெரும் பாம்பைப் போலவோ இருக்கும் என்று கூறுகின்றனர்.
மேலும் இது மர்மமான பு யு லூவின் நகரத்தின் புராணக்கதைகளையும், சபிக்கப்பட்ட நாகாவுடன் புரளியாகவும் கூறப்படுகின்றது.
அதாவது ஒரு மாபெரும் பாம்பு இறந்து கல்லாக மாறியிருக்கலாம். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ராட்சத பாம்பு இறக்கும் போது அது அழுகாது என சில பதிவுகளும் உலாவருகின்றது.
சபிக்கப்பட்ட நாகாவின் மர்மமான நகரமான பு யு லூவின் புராணக்கதைகளைக் குறிப்பிட்டு ஒரு மாபெரும் பாம்பு இறந்து கல்லாக மாறியிருக்கலாம் எனவும், நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ராட்சத பாம்பு இறந்துவிட்டது.
பாம்பின் உடலுக்குள் சென்ற தாதுக்கள் நீர் மற்றும் அழுத்தத்தில் ஒரு பாறையாகி நீண்ட நாள் கழித்து மக்கள் பார்க்க கல் பாம்புகளின் எச்சங்கள் இப்படி தெரிகின்றது எனவும் சில புரளிகள் பரவி வருகிறது.
“யூ லூ கிங்” ஒரு சபிக்கப்பட்ட ராஜாவின் கதையைச் சொல்லும் ஒரு புராணக்கதையும் உள்ளது.முன்பு இந்த பகுதி நோங் கை மற்றும் தற்போது இந்த நகரம் புவெங் கான் என்று அழைக்கப்படுகிறது.
பாங் ஃபோவு நாகா குகையின் படங்களை வேறு இடத்தில் இருக்கும் மற்றொரு பாம்பு தலையை ஒத்த ஒரு பாறையை கொண்டு வந்து பாம்பின் தலை மற்றும் உடல் இரண்டையும் கொண்ட ஒரே இடம் என்று கூறி கொண்டு வந்தார்.
இரண்டும் வெவ்வேறு இடங்கள் என்ற தெளிவை மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டது. பாம்பின் தலை கல் லாவோஸ் பி.டி.ஆரின் உடோம்சாயில் உள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த “நாகா குகை” தாய்லாந்தில் புவலங்கா தேசிய பூங்கா, புவெங் காங் லாங் மாவட்டம், புவெங் கான் மாகாணம் மற்றும் வாட் தாம் சாய் மோங்கோனுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது.