தாய் எடுத்த விபரீத முடிவு… அனாதையான ஒரு மாத குழந்தை : நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

444

அரியலூர்..

அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த கர்ப்பக லட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இளவரசன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கணவன், மனைவி ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கர்ப்பக லட்சுமிக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து அவர் தனது தாய் வீட்டில் இருந்து குழந்தையை கவனித்து வந்தார். இந்த சூழலில், அண்மையில் அவர் குழந்தையுடன் தனது கணவர் வீட்டுக்கு சென்றிருந்தார்.


நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கர்ப்பக லட்சுமி, தனது படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்கினார். வீட்டில் குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரலை கேட்ட உறவினர்கள் அறைக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது கர்ப்பக லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கர்ப்பகாலட்சுமியின் தந்தை பரமசிவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அழகிய மணவாளன் கிராமத்திற்கு வந்த பரமசிவம் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பெண்ணின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பக லட்சுமியின் கணவர், மாமியார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.