உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி 26 வயதான பெண் ஒருவர் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுபவர் 26 வயதான Dani Housley. இவர், வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தால், உடல் நலம் பாதிக்கப்பட்ட இவரது தங்கைக்கு அது ஒருவேளை மேலும் பிரச்சினையை உண்டாக்கும் என்பதற்காக தனி வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தார்.
பின்னர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், குடும்பத்துடன் இணைந்து கொள்வதற்காக பணி முடிந்து வீடு திரும்பினார். வீட்டில் இருந்து வந்த இவரது உடல் முழுவதும் திடீரென ஒருநாள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.
இதனைக்கண்ட அவருடைய தங்கை, “அக்கா உங்கள் உடலின் நிறம் வேடிக்கையாக இருக்கிறது” என்று நிலைமை புரியாமல் கிண்டல் செய்ய, இதை கவனித்த Dani Housley-யின் தாய் Sharon மகளுக்கு ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், Dani-யின் உடல் நிலை இன்னும் மோசமாகி அவர், கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்ட பின்னரும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் எந்த சிகிச்சை பலனளிக்காமல் நிமோனியா அவரை தாக்கியதை அடுத்து அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து, இறுதியில் கோமாவில் இருந்து விடுபடாமலே Dani மரணமடைந்துள்ளார்.
ஆனால் அவருடைய உடல் எதற்கு மஞ்சளானது? அவர் ஏன் திடீரென நோய்வாய்ப்பட்டார்? என்பன போன்ற விஷயங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அக்குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.