திருமணத்தில் அலறிய DJ இசை : நெஞ்சு வலியில் சரிந்து விழுந்த மணமகன் : நின்றுபோன திருமணம்!!

2285

இந்தியா..

இந்தியாவின் புகார் மாநிலத்தில் உள்ள சீதாமார்ஹி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொண்டாட்டத்தில் DJ இசை கச்சேரியின் சத்ததை கேட்க முடியாமல்,

மணமகன் சுரேந்திர குமார்(22) உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமகன் சுரேந்திர குமார் DJ இசை கச்சேரியின் சத்தம் தொந்தரவாக இருப்பதாக கூறியும் ஒலியின் அளவு குறைக்கப்படவில்லை.

இதனால் சுரேந்திர குமாருக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். பின் மருத்துவமனைக்கு விரைவாக அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.