திருமணமான அடுத்த நாளே பரிதாபமாக உயிரிழந்த புதுப்பெண் : கதறும் குடும்பம்!!

232

சேலம்…

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் செந்தில் (32), இவர் கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைப்பார்த்து வருகிறார்.

இவருக்கும் எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகள் சுதா (27), என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் சுதாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது தாய் சின்ன பொண்ணு என்பவர் சுதாவை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.


அப்போது வழியிலேயே சுதா மயங்கினார். இதையடுத்து அவரது தாயார் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் சுதாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அப்போது சுதா இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது சுதாவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மூச்சு திணறல் இருந்து வந்ததும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.