திருமணம் கடந்த உறவு… அண்ணனை கொடூரமாக கொலை செய்த தம்பி!!

448

சேலத்தில்..

சேலம் மாவட்டம் ஏற்காடு கொம்மைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சேகருக்கு வினோத், விவேக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருமே தனித்தனியே திருமணமாகி மனைவியுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணன் வினோத்துக்கும், விவேக்கின் மனைவி வெண்ணிலாவுக்கும் சில ஆண்டுகளாக திருமணம் கடந்த உறவு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அறிந்து வெகுண்டெழுத்த தம்பி விவேக் அண்ணனின் சட்டையை பிடித்து கடுமையாக மிரட்டியுள்ளார். இதனால் மிரண்டு போன வினோத், தவறை உணர்ந்து விட்டதாகவும் திருந்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் மனதை மாற்றிக் கொள்ளாத வினோத், தம்பியின் மனைவியோடு தனது திருமணம் கடந்த உறவை நீட்டித்து வந்துள்ளார். இதனால் மீண்டும் ஆக்ரோஷமான விவேக் மனைவி வெண்ணிலாவை அம்மா வீட்டில் விட்டு விட்டு, திரும்பி வந்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட வினோத், விவேக்கை மறித்து தகராறில் ஈடுபட்டார்.


அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிப்போய் ஆத்திரமடைந்த விவேக், அண்ணன் தலையில், கல்லை ஓங்கி போட்டார். ரத்தம் வழிந்ததையடுத்து மயங்கிய வினோத் சரிந்து விழுந்தார். பின்னர் மனைவிக்கு போன் செய்த விவேக் அண்ணனை கல்லால் அடித்ததாகவும்,  யாராவது கேட்டால் எருமை மாடு முட்டி விழுந்ததாக கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோத், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தன் மனைவி மீது ஆசைப்பட்டதால் தம்பியே, அண்ணனை ஆத்திரம் தீர கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.