அமெரிக்காவை சேர்ந்து இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து மூன்று நாட்கள் இடைவெளியில் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.
கலிபோர்னியாவை சேந்த கரீனா ரின்கன் மற்றும் கெல்லில் மிசா ஆகிய இரண்டு அழகிய இளம் பெண்களும் பள்ளிப்பருவத்தில் இருந்தே தோழிகளாக இருந்தார்.
பின்னர் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து வெவ்வேறு திசைக்கு சென்றனர். இதையடுத்து 2013ல் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.
இதன் பின்னர் தான் கரீனா – கெல்லில் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2017ல் இவர்களின் காதல் இருவீட்டாருக்கும் தெரிந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து ஒரே நேரத்தில் கர்ப்பமாக வேண்டும் என இரண்டு பேரும் விரும்பினார்கள்.
நீண்ட யோசனைக்கு பிறகு ஓன்லைன் மூலம் இரண்டு நபர்களின் உயிரணுக்களை வாங்கி தங்கள் உடலில் செலுத்தி கொண்டதன் மூலம் கரீனா மற்றும் கெல்லில் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்தனர். கடந்தாண்டு ஜூலை மாதம் கெல்லில் முதலில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார், ஆரோக்கியமாக பிறந்த அக்குழந்தை 2.72 உடை எடை கொண்டதாக இருந்தது.
அடுத்த மூன்று நாட்களில் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரீனா பெண் குழந்தையை பெற்றெடுத்தார், அதன் எடை 3 கிலோவாக இருந்தது. இரண்டு குழந்தைகளுக்கும் முறையே லியோ மற்றும் சோபி என பெயர் வைக்கப்பட்ட நிலையில் மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து வருகின்றனர்.
இது குறித்து கரீனா கூறுகையில், கெல்லில் முதலில் ஆண் நண்பர்கள் குறித்து பேசுவார், அது எனக்கு பொறாமையை கொடுத்தது. பின்னர் தான் என் காதலை சொன்னேன், அவரும் அதை புரிந்து கொண்டார். எங்கள் திருமணத்துக்கு மொத்த குடும்பத்தாரும் ஒத்து கொள்ளவில்லை. மற்ற ஜோடிகளுக்கு எனது ஆலோசனை என்னவென்றால் எதையும் சிந்தித்து செய்யுங்கள், அதே நேரம் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள் என கூறியுள்ளார்.