திருவாரூர்….

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் திருமண கனவில் இருந்த இளைஞரை நல்ல பாம்பு கடித்ததால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் மோகன்ராஜை நல்ல பாம்பு கடித்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அரசு மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளைஞர் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















