திருமண நாளிலே மணமகளை அடித்துக்கொன்ற மணமகன்! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்: தெரியவந்த காரணம்!!

472

ரஷ்யா………

ரஷ்யாவில் திருமணநாள் அன்றே மணமகளை, மணமகன் அடித்து கொன்ற சம்பவம் வந்திருந்த விருந்தினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கள் திருமணத்திற்கு வந்திருந்த ஒருவருடன் தவறாக நடந்துகொள்வதாக குற்றம் சாட்டி, மணமகளான Oksana Poludentseva (36)-ஐ அடித்தே கொன்றார் மணமகனான Stepan Dolgikh (33).

ஏற்கனவே குற்றம் செய்து சிறையில் இருந்த Stepanஐ சந்தித்த Oksana, தன்னால் அவரை திருத்திவிட முடியும் என்று நம்பி அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

ஆனால்,திருமணத்தன்றே, திருமணத்துக்கு வந்திருந்த ஒருவருடன் தன் மனைவி பேசுவதைக் கண்டு பொறாமை ஏற்பட்டு, அவரை தவறாக குற்றம் சாட்டி, குடிபோதையில் அவரை அடித்துக் கொலை செய்துள்ளார் Stepan.


திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் முன்பே Oksanaவை தலையிலும் உடலிலும் மாறி மாறி அடிக்க, அவர் உயிரிழந்ததும் அவரது உடலை அருகிலிருந்த நீரோடை ஒன்றில் தூக்கி வீசியுள்ளார் Stepan.

பயந்து அவரை தடுக்காத விருந்தினர்கள், உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள். பொலிசார் திருமணம் நடக்கவிருந்த இடத்திலேயே Stepan-ஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

Stepan குற்றவாளி என்று தெரிந்தும், அவரைத் திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் அவருடன் வாழ முடிவு செய்த Oksana, பரிதாபமாக திருமண வாழ்க்கை தொடங்கும் முன்பே உயிரிழந்துள்ளார்.