துக்க நிகழ்வுக்கு சென்ற அக்கா-தங்கைக்கு நேர்ந்த பரிதாபம் : சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

3314

திருப்பத்தூர்…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வலையாம்பட்டு ராஜிவ் நகரைச் சேர்ந்தவர் வசந்தா(67).

இவரும் ஆம்பூரைச் சேர்ந்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த தங்கை சாவித்திரியும்(66), தங்கள் உறவினர் வீட்டின் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.

ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை இருவரும் வந்த நிலையில், வசந்தாவின் மகன் பிரகாஷ் டிக்கெட் வாங்க சென்றுள்ளார்.


அச்சமயம் வசந்தாவும், அவரது தங்கை சாவித்திரியும் இரண்டாம் நடைமேடைக்கு செல்ல தாண்டவளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது வேகமாக வந்த ரயில் (மங்களூர் எக்ஸ்பிரஸ்) அவர்கள் இருவர் மீதும் மோதியுள்ளது.

இதில் சகோதரிகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.