பெங்களூரில்..

ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா கோனவட்லா கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் லிங்கசுகுர் டவுனில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த காலேஜிலேயே ஹாஸ்டல் உள்ளதால், அங்கேயே தங்கி படித்து வந்தார்.. இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி நைட், ஹாஸ்டலில் உள்ள தன்னுடைய ரூமில், மாணவி தூக்கில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் லிங்கசுகுர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.. இதையடுத்து போலீசாரும் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.

வழக்கு பதிவு செய்து இதுகுறித்த விசாரணையையும் கையில் எடுத்தனர்.. இதற்கிடையே, மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக லிங்கசுகுர் போலீசில் புகார் அளித்தனர்..

அதற்குள் மாணவியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் போலீசாருக்கு கிடைத்தது. அதில், மாணவி க.ற்.ப.ழி.த்.து கொ.லை செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, லிங்கசுகுர் போலீசார் தற்கொலை வழக்கை மாற்றி, கற்பழித்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போதுதான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.. இந்த காலேஜ் பிரின்சிபல் பெயர் ரமேஷ்.. இவர்தான், அந்த ஹாஸ்டலின் வார்டனாகவும் இருந்துள்ளார்..

அதனால் அந்த ஹாஸ்டலுக்குள்ளேயே எப்ப பார்த்தாலும் ரவுண்டு அடித்து கொண்டிருப்பாராம்.. அடிக்கடி அந்த மாணவியை தன்னுடைய ரூமுக்கும் அழைத்து வந்து பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டுத்து வந்திருக்கிறார்.

மாணவி இதற்கு மறுக்கப்படும்போதெல்லாம் மிரட்டப்பட்டுள்ளார். பிரின்சிபலின் மிரட்டலுக்கு பயந்து, இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

ஆனால், நாளுக்கு நாள் கல்லூரி பிரின்சிபலின் அத்துமீறல் அதிகரித்ததால், பியூசி 2-ம் ஆண்டை, வேறு காலேஜில் சேர்ந்து படிக்க முடிவு செய்திருந்தார்… இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல், அந்த மாணவியை தன்னுடைய ரூமுக்குள் அழைத்து வந்து பாலியல் தொல்லை தந்திருக்கிறார்.. அத்துடன் மாணவியை பலாத்காரமும் செய்ததாக தெரிகிறது…

ஆனால், மாணவி இந்த விஷயத்தை வெளியே சொல்லிவிடக்கூடும் என்பதால், அவரை அங்கேயே கொலையும் செய்துள்ளார்..அதற்கு பிறகு சடலத்தை, மாணவியின் ரூமுக்குள் தூக்கி சென்று, அந்த அறையிலேயே தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை போல செட்டப் செய்துவிட்டும் தப்பி சென்றுள்ளார்.. இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது..

ஆனால், பிரின்சிபல் ரமேஷை காணோம்.. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியது தெரிந்ததுமே தலைமறைவானார்… இதையடுத்து, அவரை வலைவீசி தேடி வந்ததையடுத்து, தலைமறைவாக இருந்த ரமேஷ் நேற்றைய தினம் சிக்கினார்.. லிங்கசுகுர் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்துகின்றனர்.















