துணை நடிகையின் காரில் கஞ்சா பொட்டலங்கள்: பொலிசிடம் வசமாக சிக்கிய சம்பவம்!!

1128

கேரளாவின் திருச்சூரில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கஞ்சாவை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர்.

கேரளாவை சேர்ந்தவர் சரிதா சலீம், சின்னத்திரை தொடர்களுக்கு தேவையான துணை நடிகர்களை ஏற்பாடு செய்து வந்தார்.

அதுமட்டுமின்றி மலையாள திரைப்படங்கள், சீரியல்கள் சிலவற்றி லும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து கேரளாவில் விற்பனை செய்து வந்துள்ளார்.

இதேபோல் ஒரு கிலோ கஞ்சாவுடன் வந்த போது திருச்சூரில் பொலிசாரின் ரோந்து பணியில் சிக்கிக் கொண்டார்.


கஞ்சா இருப்பதை உறுதி செய்த பொலிசார் சரிதா சலீம் மற்றும் அவரது ஓட்டுனர் சுதிரை கைது செய்தனர்.

இதையடுத்து இந்த செயலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.