கடந்த சில தினங்களுக்கு முன்னதாக காணாமல் போயிருந்த தென்கொரியாவின் சியோல் நகர மேயர் பார்க் ஒன் சூன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தென்கொரியாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்பட்ட இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் பார்க் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டுகள் தென்கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,
தனது தந்தையை காணவில்லை எனவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் பார்க்கின் மகள் நேற்று முன்தினம் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இதனால் மாயமான பார்க்கை தேடும் பணியில் சியோல் நகர பொலிஸார் ஈடுபட்டனர். இந்நிலையில், மாயமான பார்க் ஒன் சூன் சங்பக் மலைப்பகுதியில் நேற்று பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
தன்மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்தே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக
பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஆதாரமாக அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதிவைத்திருந்த கடிதத்தையும் பார்க்கின் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.