தோழியை மிரட்டி நண்பர்களுடன் பலாத்காரம் செய்த நடன ஆசிரியர்!!

616

கர்நாடகா…

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொடிகேஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் அன்டி ஜார்ஜ். இவருக்கு வயது 28. இவர் அதே பகுதியில் பள்ளியில் நடன ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

தனிமையில் சந்தித்த போது அந்த இளைஞர் தனது காதலியான இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்து வைத்திருந்தார். பின்னர் அவர் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை காண்பித்து பெண்ணை மிரட்டி உள்ளார்.


மேலும் இதுபோல் மிரட்டி பெண்ணை பலமுறை கற்பழித்துள்ளார். மேலும் அவர் தனது காதலியை தனது நண்பர்கள் சிலருக்கும் கம்பெனிகொடுக்க சொல்லி மிரட்டியுள்ளார்.

அவர்களும் அந்த பெண்ணை மிரட்டி உல்லாசம் அனுபவித்து உள்ளனர். அதே நேரத்தில் ஆபாச வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவின. இதன்பிறகு அந்த பெண், கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஜார்ஜ், சந்தோஷ் மற்றும் சாஷி ஆகியோர் என்பதும் ஜார்ஜ் தான் பெண்ணின் காதலன் என்பதும் தெரிந்தது.

இதையடுத்து ஜார்ஜ் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பென்டிரைவ் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.