நடந்தே சென்ற வெளிமாநில தொழிலாளி.. சாலையில் இறந்த மகள்!

1062

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தங்களின் சொந்த மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களில் பணிபுரிந்த வந்த பலரும் வேலையின்றி, வருமானமின்றி தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலத்தவர் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முன் வராததால் அவர்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊருக்கு நடந்தே சென்று வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. பஞ்சாப்பில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு நடந்து செல்லும் வெளிமாநில தொழிலாளர்களில் ஒரு பெற்றோர் தனது குழந்தையை சூட்கேஸில் படுக்க வைத்து இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி மனதை உருக வைத்தது.

அதேபோல், கர்ப்பிணி மனைவி மற்றும் தனது குழந்தையை தனது வண்டியில் அமர வைத்து ஒரு கணவன் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி பலரும் அதிர்ச்சி அடைய வைத்தது.


இந்நிலையில், தனது இரு மகள்களுடன் நடந்த சென்ற கூலித்தொழிலாளியின் மகள் சாலையிலேயே இறந்து போனாள். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதற்கு மத்திய அரசே காரணம் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.