தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்தில், வடிவேலுவுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம்.
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா நடிகராக முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் நடிகராக வருவதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சி மூலம் மீடியாவிற்கு நுழைந்தார்.
பின்னர் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமானார். அதற்கு பிறகு அவரின் பாரிய முயற்சியால் நகைச்சுவை நடிகராக வளம் வந்தார்.
தற்போது ஹீரோவாக அடுத்தக்கட்டத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்.
தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,
அவரின் ரசிகர்கள் பழைய காணொளி ஒன்றினை பகிர்ந்து நடிகர் சந்தானம் நடிகராகும் முன்பு vjவாக இருந்தார் என்று கூறியுள்ளனர்.
இதனை பார்த்த பலரும் நம்ப சந்தானமா இது என்று ஷாக்காகியுள்ளனர்.