நடிகர் ராம்கியை எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு!!! இப்போ எப்படி நெருங்கி போயிட்டார் பாருங்க!!

465

பிரபல நடிகர் ராம்கி 1987 ஆம் ஆண்டு வெளிவந்த சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு இவர் செந்தூரப்பூவே, இணைந்த கைகள், வனஜா கிரிஜா, மாயா பஜார் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வந்தார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 6 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரியாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கம் பேக் கொடுத்தார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிரபல தொகுப்பாளினி பெப்சி உமா நடிகர் ராம்கி யுடன் நடத்திய நேர்காணலில் அவரைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பெப்சி உமா நடிகர் ராம்கி நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த ஜோதிடர் என்ற யாருக்கும் தெரியாத உண்மையை வெளியே கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் ராம்கி அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதை நடிகர் ராம்கி எப்படியாவது சில நாட்களிலேயே வாங்கிவிடுவாராம். சிறுவயது முதலே தனக்கு ஜோதிட துறையில் மிகுந்த ஆர்வம் எனவும் நடிகர் ராம்கி அவர்களே அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விவேக்கும் ராம்கி அவர்கள் அறிவியல் ரீதியாக ஜோதிடத்தை கற்றுக் கொண்டார் எனக் கூறியிருந்தார்.


எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் இவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றும் ராம்கி டெக்னாலஜியில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் ராம்கி ஒரு டெக்கி என்று யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவலை நடிகர் விவேக்கின் மூலமாக தொகுப்பாளினி பெப்சி உமா நடத்திய நேர்காணலில் தெரியவந்துள்ளது.இதெல்லாம் ஒருபுறம் இந்த வருஷம் வெள்ளித்திரை சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ராம்கி யின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருக்கின்றது இதனை பார்த்த இணையவாசிகள் நம்ம ராம்கி என்று ஆ ச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.