நடிகையை கர்ப்பமாக்கி நாசம் செய்த இயக்குந..ர் எப்போ நடவடிக்கை எடுப்பீங்க? நடிகை பூனம் கவுர் ஆவேசம்!!

120

தமிழ், தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் பிரபல நடிகை பூனம் கவுர், நடிகையை கர்ப்பமாக்கி அவரது வாழ்க்கையை நாசமாக்கிய இயக்குநர் மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க என்று கேட்டுள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை பூனம் கவுர். இவர் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநர் ஒருவர், நடிகையை கர்ப்பமாக்கி, அவரது வாழ்க்கையை நாசம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரில் நடிகை பூனம் கவுர் நடிகையின் பெயரையோ, இயக்குநரும் பெயரையோ குறிப்பிடாமல், இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அனைவருக்கும் தெரியும் என்றாலும் ஏன் அந்த இயக்குநர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறீர்க? எப்போது அவர் மீது நடவடிக்கை எடுப்பீர்கள்? என்று ஆவேசமாக கேட்டு அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்.

இதற்கு முன்பு நடிகை பூனம் கவுர் தெலுங்கின் முன்னணி இயக்குநர் திரிவிக்ரம் சீனிவாஸ் மீதும்,  தெலுங்கு சினிமா நடிகர் பவர் ஸ்டார் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது இவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேட்டிகளையும் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.


தற்போது, “நடிகை ஒருவரை கர்ப்பமாக்கி நாசம் செய்து, அதன் பின்னர் கருச்சிதைவை ஏற்படுத்தி அவரின் வாழ்க்கையையே நாசம் செய்தவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறீர்கள்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அதே சமயம் அந்த நபர் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

பலரும் இது குறித்து செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அப்போ நடிகை ஆண்டிரியாவும் கிடையாது. அவர் உதயநிதியும் கிடையாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

“அந்த பஞ்சாபி நடிகைக்கு உதவ தெலுங்கு சினிமா நடிகர்கள் சங்கமான மா (மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்) முயற்சித்தது. எனது பெயரும், நடிகரும், அரசியல்வாதியான அவரும் அரசியல் உள்நோக்கத்துக்காக தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளனர்” என்று நடிகை பூனம் கவுர் குறிப்பிட்டுள்ளார்.

நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீதான பாலியல் புகார் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், அது குறித்து அவரது ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்புகையில், “குற்றவாளியான ஷேக் ஜானியை இனி மாஸ்டர் என்று அழைக்ககூடாது. மாஸ்டர் என்ற வார்த்தைக்கு மரியாதை கொடுக்க வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.