கர்நாடகா..

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடுரொட்டில் கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 19 வயது மாணவியைக் கழுத்தை அறுத்துக் காதலன் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கல்லூரி வளாகத்திலேயே கொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், வன்முறை செயல்களும் சமீபமாக நாடு முழுவதுமே அதிகரித்து வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி துவங்கி, பரங்கிமலை ரயில் நிலையில், சிதம்பரம் கல்லூரி வாசல் என்று இளம்பெண்கள் ஒருதலைக் காதலால் உயிரை இழக்கிறார்கள்.

பெங்களூரு அடுத்த சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஷி (19). இவர் ஏலஹங்கா கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.ஏ படித்து வந்தார். நேற்று, கல்லூரி முடிந்து பேருந்தில் திப்பூர் வந்து இறங்கி,

வழக்கம்போல வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது, பைக்கில் வந்த இரு வாலிபர்கள் ராஷியை வழிமறித்து, தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து ராஷியின் கழுத்தை அறுத்து, ரத்த வெள்ளத்தில் ராஷியை அங்கேயே விட்டுத் தப்பிச் சென்றனர்.















