நடுரோட்டில் சில்மிஷம் செய்த நபர் : கல்லூரி மாணவி செய்த தரமான சம்பவம் : வைரலாகும் வீடியோ!!

702

கர்நாடக……

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் பல கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் தங்குவதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் விடுதிகளும் அதிகம் உள்ளன.

இந்த நிலையில், அங்குள்ள குந்தாபுரா என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் வழக்கம்போல், விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த மாணவியை ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அந்த நபர் மாணவியிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி சத்தம்போட்டதால், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அந்த நபரை மடக்கிபிடித்து தாக்கினர்.


அப்போது பாதிக்கப்பட்ட மாணவியும் ஆத்திரத்தில் தான் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி, அந்த நபரை சரமாரி விளாசினார். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்.

அடி வாங்கிய அந்த நபர் தன்னை விடுவிக்குமாறு சுற்றி இருந்தவர்களிடம் கெஞ்சுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஊர்மக்கள் யாரும் அடி வாங்கிய நபரின் உதவிக்கு வரவில்லை.

பின்னர் அந்த இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியிலும், இது தொடர்பான வீடியோ பரவி மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.