நள்ளிரவு வரை சிரித்து பேசினார் : திருமணமான ஓராண்டில் இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

1200

இந்தியாவில் சிறிய விடயத்துக்கு மனைவியுடன் சண்டை போட்ட கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியை சேர்ந்தவர் நிகில். இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை மனைவியுடன் சிறிய விடயத்துக்கு சண்டை போட்ட நிகில் பின்னர் தனது அறைக்குள் சென்றுவிட்டார்.

வெகுநேரமாகியும் நிகில் வெளியில் வராததால் பயந்து போன மனைவி கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

இதையடுத்து குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து கதவை உடைத்து பார்த்த போது நிகில் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்தனர், அவர்கள் கூறுகையில், சின்ன விடயத்துக்கு கூட நிகிலும் அவர் மனைவியும் அடிக்கடி சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.


சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட வெகுநேரம் குடும்பத்தாருடன் சிரித்து பேசி கொண்டிருந்தார்.

பின்னர் நடுஇரவில் தான் தூங்க சென்றார், அடுத்தநாள் மதியம் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் போதே திடீரென இந்த முடிவை நிகில் எடுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.