நஸ்ரியாவை இப்படிதான் கா தல் வலையில் விழுந்தார்.. 6 வருடத்துக்கு பின் ரகசியத்தை உடைத்த பகத் பாசில்!

913

தமிழில் உருவான நேரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அதனைத் தொடர்ந்து அவர் நையாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலேயே நடித்தாலும் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

இந்நிலையில், அவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா 2018ம் ஆண்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியாவிற்கிடையே காதல் எவ்வாறு மலர்ந்தது என்பது குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.


இந்நிலையில் இது குறித்து பகத் பாசில் கூறியதாவது, பெங்களூர் டேஸ் படத்தில் சேர்ந்து நடித்தபோதுதான் எங்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பகத் பாசில் என்றால் அனைத்து நடிகர்களும் தேடிவந்து ஆர்வமுடன் என்னை சந்திப்பர். ஆனால் படப்பிடிப்பில் நஸ்ரியா இப்படி ஒருவரை பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை. மிகவும் சாதாரணமாகவே இருந்து வந்துள்ளார். அவ்வாறு ஒரு பெண்ணைப் பார்ப்பது எனக்கு புதிதாக இருந்தது. மேலும், அவர் என்னை பார்க்க வேண்டும், கவனிக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் சில விஷயங்கள் செய்ய வேண்டியிருந்தது.

அதுவேதான் பின்னர் அவரை காதலிக்க வைத்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் நஸ்ரியாவிடம் பேசும் தைரியம் எனக்கு இல்லாத நிலையில், அவர்தான் என்னிடம் வந்து வெளியே செல்லலாமா? என கேட்டார் என்று கூறியுள்ளார்.