நிச்சயமாக காதல் திருமணம் தான் செய்வேன் – ரீது வர்மா!

916

நிச்சயமாக காதல் திருமணமே செய்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நடிகை ரீது வர்மா குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தனது திருமணம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “நான் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என எனது பெற்றோர் ஆவலாக காத்திருக்கிறார்கள்.


ஆனால் நான் அவர்களிடம் இப்போதைக்கு திருமணம் செய்யப் போவதில்லை என தெளிவாக சொல்லிவிட்டேன்.

எனக்கு ஏற்றவரை எப்போது பார்க்கிறேனோ அப்போது தான் திருமணம். அது நிச்சயம் காதல் திருமணமாகத் தான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.