நினைத்ததை, நினைத்த உடனேயே சாதிக்க வேண்டுமா? இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதுமே!

4434

மனிதர்களாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு குணம் இருக்கும். சிலர், சில பொருட்களின் மீது ஆசைப்பட்டாலும், அதை உடனே அடைய வேண்டும் என்று எண்ண மாட்டார்கள்? ‘நமக்கு நேரம் காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்’ என்ற எண்ணம் அவர்களது மனதில் தோன்றும். சிலருக்கு தான் நினைத்ததை உடனே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதாவது, அடுத்தவர்கள் உடுத்தியிருக்கும் உடை, ஆபரணம் அடுத்தவர்கள் உபயோகப்படுத்தும் பொருள், இப்படி என்று வரிசையாக பார்ப்பதை எல்லாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு ராகம். நினைத்ததை, நினைத்த உடன், சாதிக்கணும் என்று குணம் கொண்டவர்கள் இவர்கள்.

சிலருக்கு, நிலம், வீடு, வாகனம் இவைகளை வாங்கி, சொத்து சேர்க்க வேண்டும் என்ற பெரிய எண்ணம் இருக்கும். எப்படி இருந்தாலும் ஆசை ஆசை தானே! நீங்கள் விரும்பிய, ஆசைப்பட்ட பொருளை விரைவாக வாங்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதலில் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை நேர்வழியில் அடைய வேண்டும் என்ற மனப்பான்மை உங்களது மனதில் தோன்ற வேண்டும். அடைய வேண்டும் என்பதற்காக, எந்த ஒரு குறிக்கோளையும் குறுக்குவழியில் சென்று அடையக்கூடாது, என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதோடு சேர்த்து தினந்தோறும் நீங்கள் செய்யும் இறைவழிபாடும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்கள் மனதில் எதை அடைய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, குறிக்கோள் வைத்து இருக்கிறீர்களோ, அதை நினைத்து பின்வரும் மந்திரத்தை தினந்தோறும் காலை வேளையில் உச்சரிக்க வேண்டும். நினைத்ததை நினைத்த மார்க்கத்தில், உங்கள் கையில் கொண்டு வந்து சேர்க்க மந்திரங்கள் ஒன்றும் மாயாஜால வித்தைகள் அல்ல என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை தினம்தோறும் உச்சரியுங்கள்! விடா முயற்சியோடு, நீங்கள் விரும்பியதை அடைய, விடாமல் முயற்சி செய்யுங்கள். நீங்கள் விரும்பியது உங்களுக்கு மூன்றில் இருந்து ஆறு மாதங்களுக்குள் நிச்சயம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கான மந்திரம் இதோ!


ஓம் கிலி சிங் – ஓம் ரீங் அங்

ஓம் ஸ்ரீ கிலி – ஓம் கிலி சங்

ஓம் ரீங் கிலி – ஓம் ஸ்ரீ ரீம்

ஓம் ரீங் அம் – ஓம் கிலி அங்!

இந்த மந்திரத்தை காலை சூரிய உதயத்திற்கு முன்பு, 27 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் உச்சரித்துப் பாருங்கள்! உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை உணர முடியும். எந்த ஒரு பரிகாரத்தையும், மந்திரத்தையும் செய்த உடனே பலன் தர வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறான ஒன்று என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சிலபேர், சொத்துக்கள் வாங்குவதற்கு கையில் பணத்தைத் தயாராக வைத்திருப்பார்கள். ஆனால், நேரம் காலம் கூடி வராது. கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகும் அளவிற்கு பிரச்சனைகள் கூட வரும். இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால், உங்கள் கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் சொத்துக்களாக மாற வேண்டும் என்றால், அதற்கான ஒரு வழிபாடும் உள்ளது.

மகாவிஷ்ணு வழிபாடு அது. இந்த வழிபாட்டினை திருவோண நட்சத்திரத்தன்று செய்வது மிகவும் சிறப்பு. திருவோண நட்சத்திரத்தன்று, மகாவிஷ்ணுவுக்கு, காலை நேரத்தில் துவரம் பருப்பும், நெய்யும் சேர்த்து பருப்பு சாத நெய்வேதியம் தயார் செய்து, விஷ்ணு பகவானுக்கு படைத்து, துளசி மாலை அணிவித்து மனதார வேண்டிக் கொண்டு வந்தீர்கள் என்றால், கூடிய விரைவில் உங்களுக்கு சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நம்பிக்கையோடு செய்யும் பரிகாரம் எதுவாக இருந்தாலும் அதற்கு கைமேல் பலன் உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.