நெருக்கமாக இருந்துவிட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த தனியார் வங்கி மேலாளருக்கு நேர்ந்த சோகம்!!

724

கரூர்..

கரூரில் பொறியியல் கல்லூரி மாணவியை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவு வைத்து விட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறி கல்லூரி மாணவி தனியார் வங்கி மேலாளர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூரில் வசிப்பவர் கிரிஜா (வயது 21 ,பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், கிரிஜாவின் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்த தனியார் வங்கியின் கரூர் கிளை மேளாலராக பணியாற்றி வரும் திருச்சியை சேர்ந்த சண்முகநாதன் என்பவருடன் கிரிஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.


அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சண்முகநாதன் மாணவி கிரிஜாவுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

11 மாத காதல் வாழ்க்கைக்குப் பிறகு வங்கி மேலாளர் சண்முகநாதன் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும்,

தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் என்பதால் தன்னை ஒதுக்குவதாக கூறி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிரிஜா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.