பக்கத்து வீட்டில் கள்ளக்காதலன்.. கணவனை வெறுப்பேற்ற வாசலில் நின்று சிரித்து பேசிய மனைவி.. அடுத்தடுத்து நிகழ்ந்த விபரீதம்!!

238

பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞருடனான கள்ளக்காதலால் கணவனை உதறிவிட்டு, கள்ளக்காதலன் வீட்டிற்குள் சென்று குடும்பம் நடத்த துவங்கிய மனைவி, கணவனை வெறுப்பேற்ற வீட்டு வாசலில் கள்ளக்காதலனுடன் ஜோடியாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது பந்தலூர்.

இங்கு சேரம்பாடி சப்பந்தோட்டை சேர்ந்தவர் லோகேஷ்.. வயது 42. இவர் இந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி பெயர் நித்யா. வயது 35. இவர்களின் பக்கத்து வீட்டில் பிரவீன் வசிக்கிறார்.. அவருக்கு வயது 47. பிரவீனுக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து தனியே வாழ்ந்து வருகின்றனர்.

பக்கத்து பக்கத்து வீடு என்பதால், நித்யாவும், பிரவீனும் நண்பர்களாகியுள்ளனர். பின், இருவருக்குள்ளும் இருந்த நட்பு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயம், லோகேஷுவுக்குத் தெரிய வந்ததில், நித்யாவை கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால், நித்யாவின் கள்ளக்காதல் உறவு நீடித்தது. ஒரு கட்டத்தில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. போலீசார் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றாலும், நித்யா பிடிவாதமாக பிரவீனுடன் செல்வதாக கூறினார்.

கணவரை விவாகரத்து செய்வதாக பிடிவாதமாக பிடித்து, கணவரை பிரிந்து சென்று பிரவீனுடன் தனியே குடும்பம் நடத்தி வந்தார். அதாவது, லோகேஷின் பக்கத்து வீட்டில் நித்யா குடும்பம் நடத்தியுள்ளார்.

நேற்று பிரவீனும், நித்யாவும் வீட்டின் வெளியே நின்று சிரித்து பேசி கொண்டிருந்தனர். இதைப் பார்த்து ஆவேசமடைந்த லோகேஷ், பிரவீனின் வீட்டுக்குள் பாய்ந்து கூரிய கத்தியை கொண்டு வந்து நித்யாவையும், பிரவீனையும் சரமாரியாக வெட்டினார்.. இருவரும் அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு பிரவீனின் தந்தை சந்திரன் (70) வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார்.


ஆவேசமாக கள்ளக்காதலர்களை வெட்டிக் கொண்டிருந்த லோகேஷை தடுக்க முயன்றார். ஆனால் சந்திரனும் அரிவாளால் வெட்டப்பட்டார். அதன்பின் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் வீட்டு வாசலில் சரிந்து விழுந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பிரவீனுக்கு மட்டும் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.