பர்ஸ் முட்ட முட்ட பணம் சேர்ந்துகிட்டே இருக்கணுமா? இந்த ஒரு பொருள் போதும் கோடிக் கோடியாய் சேரும்!

1230

நம்மில் பலருக்கு என்னதான் பணம் சம்பாதித்தாலும் அது பர்ஸில் தங்காது.

நம்முடைய பர்ஸில் பணம் சேரவேண்டுமானால் சில காரியங்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சாஸ்த்திரம் கூறுகின்றது. அவற்றைப்படித்து நீங்களும் கோடிக் கோடியாய் பணம் சேர்த்து கொள்ளுங்கள்.

எம்மில் வெகு சிலர் மட்டுமே பர்ஸை முறையாக பயன்படுத்துபவர்களாக உள்ளனர். பர்ஸில் எப்போதும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக நிரம்பி வழியும்.


அந்த ரூபாய் நோட்டுக்களை அவர்கள் எடுக்கும் லாவகமே அலாதியானதாக இருக்கும். சிலருக்கு பர்ஸில் பணம் அவ்வப்போது வந்தாலும், வந்த சுவடு தெரியாமல் உடனடியாக கரைந்து விடும்.

அதற்கு முக்கிய காரணம் பணத்தை முறையாக பர்ஸில் வைக்காமல், ஏதோ ஒரு அழுக்கு பையில் அழுக்கு துணிகளை திணிப்பது போல் திணித்து வைப்பார்கள். பணத்திற்கு மதிப்பளிக்காமல் ரூபாய் நோட்டுக்களை கசக்கி திணித்து வைப்பார்கள். அப்படி ஒரு போதும் இனி செய்யக் கூடாது.

வாஸ்து சாஸ்திரம் கூறும் ரகசியம்

  • நம்முடைய பர்ஸில் குறிப்பாக ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் அவசியம் இருக்கவேண்டும்.
  • இந்த இரண்டையும் எப்போதும் செலவழிக்கவே கூடாது. என்னதான் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் கூட அதை எடுத்து செலவழிக்கவே கூடாது.
  • கூடவே, பர்ஸில் வைக்கக்கூடிய வகையில் ஒரு சிறிய அளவில் பச்சை பட்டுத் துணி அல்லது ஒரு பச்சை காகிதத்தில் ஐந்து ஏலக்காய்களை வைத்து முடிச்சு போட்டு பர்ஸில் வைத்துக்கொள்வது அவசியம்.
  • பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் ஏலக்காய், கொஞ்சம் சோம்பு, பச்சைக் கற்பூரம் போட்டு கட்டி அதை பர்ஸில் வைத்துக் கொண்டால், பணம் அநாவசியமாக செலவாகாது.
  • கூடவே நம்மை கடன் வாங்குதில் இருந்து தப்பிக்க வைக்கும். கடன் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது நிச்சயம். ஒருவேளை நாம் ஏற்கனவே கடன் வாங்கியிருந்தாலும் கூட, வெகு சீக்கிரத்தில் அந்த கடனை அடைக்கும் வகையில் நம்முடைய பர்ஸில் பணம் சேர்ந்துவிடும்.