பள்ளி மாணவியுடன் ஓட்டம் பிடித்த காவலர் : நிலைகுலைந்த பெற்றோர் : பின்னர் நடந்த விபரீதம்!!

4571

உத்தரபிரதேசம்..

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பாலியாவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஜோகேந்திர சிங், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவருடன் தப்பி ஓடிவிட்டார்.

டிசம்பர் 9 ஆம் தேதி வீட்டிற்கு சென்ற சிறுமி மீண்டும் டிசம்பர் 12 ஆம் தேதி விடுதிக்கு வந்துள்ளார்.

அதன்பிறகு, லக்னோவில் அவர் தங்கியிருந்த விடுதி அறையை காலி செய்துவிட்டதாக சிறுமியின் நண்பர்கள் அவரது தந்தையிடம் தெரிவித்தனர்.


எஸ்ஐ தனது மகளை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றதாக லக்னோவில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

ஜோகேந்திர சிங் ஏற்கனவே தகவல் தெரிவிக்காமல் பணியில் இருந்து விலகியதற்காக உயர் அதிகாரிகள் அவரை பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.