பாடலை சத்தமாக வைத்து கம்பி, கத்தியால் சித்ரவதை செய்து இளம்பெண் கொலை : பகீர் பிண்ணனி!!

661

உத்தரப்பிரதேசம்..

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் 24 வயது சமீனா. இவர் மீது திருட்டு பட்டத்தை அவருடைய உறவினர்கள் சுமத்தினர். இதனை அவர் ஒத்துக் கொள்ளாததால் சமீனாவின் உறவினர்கள் அவரை கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீனா ஜூன் 19ம்தேதி திங்கட்கிழமை காசியாபாத் சித்தார்த் விகாரில் இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றார்.

அங்கு ஹீனா மற்றும் ரமேஷ் தம்பதியரின் பிறந்தநாள் விழாவி கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த ரூ5 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகவே சமீனா தான் அவற்றை திருடி சென்றதாக ஹீனாவும், ரமேசும் சந்தேகம் அடைந்தனர்.


இது குறித்து சமீனாவிடம் கேட்கப்பட்டபோது தான் திருடவில்லை எனக் கூறினார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ள வேண்டும் என உறவினர்கள் வற்புறுத்தினர்.

அத்துடன் குச்சிகள் மற்றும் கம்பிகள் கொண்டு சமீனாவை தாக்க தொடங்கினர். அவரை கொஞ்சம், கொஞ்சமாக சித்ரவதை செய்து இந்த திருட்டை ஒப்புக்கொள்ள வற்புறுத்தினர்.

சித்திரவதை தாங்காமல் சமீனா அலறிய போது இந்த சத்தம் அக்கம் பக்கத்திற்கு கேட்டு விடக் கூடாது என்பதற்காக பாடலை சத்தமாக ஒலிக்க விட்டனர்.

அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் சமீனா சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக ஹீனா மற்றும் ரமேஷ் இருவரும் அங்கிருந்து தப்பி விட்டனர்.

ஆனால் வேகமாக சத்தம் வைத்து ஒலித்துக் கொண்டிருந்த பாடலை நிறுத்தவில்லை. தொடர்ந்து 2 நாட்களாக பாடல் விடாமல் ஒலித்து கொண்டிருந்தது.

அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் தலைமறைவானவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.