அட்லி, விஜய் கூட்டணியில் தெறி, மெர்சலுக்கு பிறகு மூன்றாவது படமாக வெளிவந்துள்ளது பிகில். பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி வெளியானது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிகில் படம் உருவாகியுள்ளதாக அறிவித்ததில் இருந்தே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருந்தது இந்தப் படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் படம் முழுவதும் அட்லியின் முந்தைய படங்களின் பாணியான சென்டிமெண்ட்டே படம் நெடுக பேசப்பட்டுள்ளது என்றும், வழக்கம் போல் பல்வேறு கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது போன்ற விமர்சனங்கள் வந்தாலும் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பிகில் கொண்டாட்டமான படமாகவே இருக்கிறது.
இந்த நிலையில், பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரத்தை ( அப்பா விஜய்) க த்தியால் கு த் தி க் கொ ல் லும் வி ல் ல னா க நடித்துள்ள ஐ.எம்.விஜயனை பற்றிய பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அலெக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில், பிகில் படத்தில் வரும் விஜயன்தான் உண்மையான பிகில். ஆ ச் ச ர் யமாக இருக்கிறதா??
இந்தியக் கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக இருப்பவர் ஐ.எம்.விஜயன். ஆரம்ப காலத்தில், சோடா விற்கும் கூலி தொழிலாளியாக இருந்த விஜயனுக்கு கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வத்தால் க ஷ் ட ப்பட்டு இந்திய அணியில் சேர்ந்தவர்.
விஜயன் மிக ஆ க்ரோஷமான Forward ஆட்டக்காரர் ஆவார். மேலும், சர்வதேச அளவில் 12 நொடிகளில் கோல் அ டி த் த வ ர் என்ற பெருமையை பெற்ற விஜயன், இந்திய கால்பந்தாட்ட அணியின் Player of the year என்ற பட்டத்தை பெற்ற முதல் வீரராகவும் உள்ளார்.
இந்தியாவின் Unsung ஹீரோவாக இருக்கும் ஐ.எம்.விஜயன் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் மட்டும் இந்தியாவில் இல்லாமல் வேறு ஏதேனும் நாடுகளில் பிறந்திருந்தால் உலக அளவில் கால்பந்து விளையாட்டில் வெ றி த் த னமான அடையாளத்தை பெற்றிருப்பார் என பலர் பதிவிட்டு வருகிறார்கள்.
இவ்வளவு பெருமைக்கும், புகழுக்கும் உரியவரான ஐ.எம்.விஜயனை பிகில் படத்தில் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது கால்பந்து விளையாட்டு ரசிகர்களிடையேயும், வட சென்னை மக்களிடையேயும் க டுமையான அ தி ரு ப் தியை ஏற்படுத்தியது.