பிரித்தானியாவில் இதுவரை கொரோனாவால் எத்தனை பேர் பலி தெரியுமா? வெளியான முக்கிய தகவல்…!

897

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 89 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது நாட்டில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை, 44,000-ஐ நெருக்கி சென்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் ஊரடங்கு இன்னும் அமுலில் உள்ளது. இருப்பினும் அவ்வப்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய உள்ளூர்களில் ஒரு சில பகுதிகளில் முழு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் லீஸ்டர் போன்ற பகுதிகளில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தின் சுகாதாரத் திணைக்களம் கடந்த 24 மணி நேரத்தில், 89 பேர் உயிரிழந்திருப்பதை உறுதிபடுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43,995-ஆக உள்ளது.


மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் வெளியில் என மொத்தம் 43,995 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா வைரஸ் துவக்கத்தில் இருந்து இங்கிலாந்தில் மொத்தம் 283,757 பேர் நேர்மறை சோதனை செய்துள்ளதாக சுகாதாரத் துறை வியாழக்கிழமை இரவு அறிவித்தது.

இருப்பினும், நேற்று 313,483 பேர் நேர்மறையான முடிவுகளைப் பெற்றுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 576 பேர் நேர்மறையை சோதித்துள்ளனர்.

ஜூலை 2 ஆம் தேதி காலை 9 மணி நிலவரப்படி, கொரோனாவுக்கு நாடு முழுவதும் 9,914,663 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் 252,084 சோதனைகள் உள்ளன.