பிரித்தானியாவில் நடந்த துயரம்! 20 இளைஞர்கள் சேர்ந்து ஒரு சிறுவனை… பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சி காட்சி!!

894

பிரித்தானியாவில் பள்ளி மாணவன் ஒருவனை சுமார் 20 பேர் கொண்ட இளைஞர்கள் கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரித்தானியாவின் East Yorkshire-ன் Hull பகுதியை சேர்ந்த சிறுவனையே குறித்த இளைஞர்கள் தாக்குகின்றனர்.

இந்த காட்சியை சிறுவனின் தந்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, என்ன நடக்கிறது என்பதை மக்கள் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சிறுவன் காதுகளை மூடிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் கூச்சலிடுவதைக் காண முடிகிறது. அதன் பின் சிறுவனை அந்த குழுவில் இருக்கும் இளைஞன் உதைக்கின்றான்.


அதன் பின் அங்கிருக்கும் சிலர் சிறுவனை நோக்கி கூச்சலிடுகின்றனர். எழுந்து பின்னோக்கி செல்லும் போது, மீண்டும் கீழே தள்ளப்படுகிறான்.

இந்த வீடியோவின் பின்னணியில், இளம் பெண் ஒருவர், நான் மிகவும் பயப்படுகிறேன் என்று சொல்வதைக் கேட்க முடிகிறது.

மற்றொரு சிறுவன் உண்மையில் அவனை காயப்படுத்தாதே என்று சொல்வதை கேட்க முடிகிறது.

அந்த இளைஞர்கள் ஏன் சிறுவனை தாக்கினார்கள்? என்ன நடந்தது? என்பது குறித்து எந்த ஒரு முழுவிபரமும் வெளியாகவில்லை.