பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது!!

830

பிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது.

இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு, தலா 250 பவுண்டுகள் விகிதம் ஒவ்வொருவருக்கும் பெற்று கொள்ளும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவுள்ளது.

இதற்கான நிதி நிலை கொள்கை வகுப்பு நிபுணர்கள் பரிந்துரையின் கீழ் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவிடவும், மேலும் வீழ்ந்து போன பொருளாதரத்தை மீள நிமிர்த்தி செல்லும் நோக்குடனும் அரசு இந்த பணத்தினை வழங்கவுள்ளது.

இதற்கான திட்டங்கள் நிறைவடைந்ததும் மக்களுக்கு வவுச்சர் வழங்கப்படும் அதனை வைத்து கடைகளில் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்திட முடியும்.


வர்த்தக உரிமையாளர்களுக்கு ஐம்பதாயிரம் பவுண்டுகள் வியாபாரக்கடன் வழங்கியது போன்று இவை இலவசமாக வழங்கப்படவுள்ளது.

ஆளும் அரசின் இந்தத் திட்ட அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய விசாவுடன் இந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு இது வழங்கப்படமாட்டாது என தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியர்களுக்கு மட்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பொருள் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்களாகும்.