பிரித்தானிய ராணியார் தோட்டத்தில் இருந்து விற்பனைக்கு வரும் விசேட பொருள்! அதன் விலை என்ன தெரியுமா?

861

பிரித்தானிய ராணியாரின் தோட்டத்தில் இருந்து பிரத்யேகமாக சேகரிக்கப்பட்ட பொருட்களில் தயாரிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ பக்கிங்ஹாம் அரண்மனை ஜின் விற்பனைக்கு வந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அதன் தளங்கள் மூடப்பட்டதால் ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் இழப்புக்களை ஈடுகட்ட இந்த ஜின் விற்பனை முடிவுக்கு வந்துள்ளது.

பிரித்தானிய ராணியாரின் தாயார் ஒரு ஜின் காக்டெய்ல் பிரியர் என கூறப்படுகிறது.

அவரது ரசனைக்கு தகுந்தவாறு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஜின் கலந்த அந்த சிறப்பு பானம் ஒவ்வொரு நாளும் மதிய உணவுக்கு முன்னர் கட்டாயம் அவருக்கு பரிமாறப்பட்டு வந்துள்ளது.


இந்த நிலையில், ராணியார் பயன்படுத்திவரும் அந்த அரிய வகை ஜின் தற்போது 40 பவுண்டுகள் கட்டணத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை சார்பாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பக்கிங்ஹாம் அரண்மனை அடுத்த ஓராண்டு காலத்திற்குள் சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் வருவாய் இழப்பை எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

அந்த இழப்பை ஈடுகட்ட, தற்போது பக்கிங்ஹாம் அரண்மனை ஜின் விற்பனையை துவங்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த பிரீமியம் லண்டன் உலர் ஜின் வாங்குவதற்கு விரைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது அதன் கடைகளில் விற்கப்படுவதுடன் அரண்மனையில் எதிர்கால உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் பரிமாறப்படும்.