பிறந்த 4 மாதத்தில் தன்னுடைய திறமையால் கோடீஸ்வரர் ஆகியுள்ள குழந்தை! எப்படி தெரியுமா? தாயார் கூறிய ஆச்சரிய தகவல்!

505

நைஜீரியாவில் பிறந்த 4 மாத குழந்தை தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார்.

Laura Ikeji என்ற இளம்பெண் எழுத்தாளர், தொழிலதிபர், சமூக ஊடக நிபுணர் என பன்முகத்தன்மை கொண்ட கோடீஸ்வரர் ஆவார்.

இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் Laurel என்ற மகள் பிறந்தார்.

இந்நிலையில் Laurel தானாகவே தனது திறமையை கொண்டு கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்ற ஆச்சரிய தகவலை அவரின் தாய் Laura வெளியிட்டுள்ளார். அதாவது Instagram Influencer என்ற விடயம் மூலமே குழந்தை கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.


இது குறித்து Lauraவ்-ன் பதிவில், இன்ஸ்டாகிராமில் அதற்குள் மிக பிரபலமாகி என் மகள் கோடீஸ்வரர் ஆகி தூதர் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்.

என்னையே அதற்குள் அவர் முந்தி விடுவார் போல் இருக்கிறது, இந்த வயதிலேயே பெரிய வேலை தான் என பதிவிட்டுள்ளார்.

அதாவது Laura இன்ஸ்டாகிராமில் மிக பிரபலம் ஆவார், அவரின் மகள் புகைப்படங்களை வைத்து செய்யப்படும் விளம்பரங்களும் அதிகளவில் பகிரப்படும் நிலையிலேயே இந்த அதிர்ஷ்டம் அவருக்கு அடித்துள்ளது.