பிளாக் பஸ்டர் படத்தின் ஸ்கிரிப்ட்டை 7 நாளில் எழுதிவிட்டேன்… நடிகர் கமல் சொன்ன ஆச்சரிய தகவல்!!

1065

நடிகர் கமல்ஹாசன் அடுத்து தலைவன் இருக்கின்றான் என்ற படத்தினை தான் இயக்க உள்ளார். அதில் அவர் ஏ.ஆர்.ரகுமான் உடன் பணியாற்ற உள்ளார்.

அவர்கள் இருவரும் இணைந்து நேற்று மாலை 5 மணிக்கு நேரலையில் கலந்துரையாடினர்.

அப்போது சினிமா உட்பட பல்வேறு விஷயங்களை பற்றியும் அவர்கள் உரையாடினார். இந்த உரையாடலை அபிஷேக் தொகுத்து வழங்கினார்.


அந்த உரையாடலில் “தேவர் மகன் ஸ்கிரிப்ட் 7 நாளில் எழுதிவிட்டேன். நண்பர் ஒருவர் அதிக அழுத்தம் கொடுத்தார். எழுதி தரவில்லை என்றால் படத்தில் இருந்து வெளியேறிவிடுவேன் என கூறினார். அதனால் 7 நாளில் எழுதி முடித்தேன்.

தற்போது அது சாத்தியமா என தெரியவில்லை” என கமல் கூறியுள்ளார்.