பீட்சாவுடன் சென்ற காதலன்… காதலியின் தந்தை வந்ததால் பறிபோன உயிர் : அதிர்ச்சி சம்பவம்!!

495

ஹைதராபாத்..

ஹைதராபாத் மாநிலம் போரபண்டாவில் உள்ள பேக்கரியில் பணிபுரிபவர் முகமது சோயப் (19). இவருக்கும் அதே பகுதியில் உள்ள பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறி, காதலித்து வந்து உள்ளனர்.

காதலயின் விருப்பப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு பீட்சா எடுத்து கொண்டு முகமது சோயப் அங்கு சென்று உள்ளார். அதே நேரத்தில், இளம் பெண்ணின் தந்தை வருகையால் பயந்துபோன சோயப், அவர்களது கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த சோயப்பை காவல் துறையினர் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சோயப் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.


இதுகுறித்து இறந்தவரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகியில், “சுமார் 17 முதல் 23 வயதுடைய இளைஞர்கள் தாங்களாகவே முடிவெடுத்து வாழ்க்கையை சீரழிக்கின்றனர். இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் கவனித்து, வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல நல்ல வழியைக் காட்ட வேண்டும்.

இளைஞர்கள் சரியான முடிவுகளை எடுத்தால் அவர்கள் திறமையை மேம்படுத்தி பெரும் வெற்றி பெறுவார்கள். எனவே, பெற்றோர்கள் இளம் பருவத்தினரிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.