புதருக்குள் கிடந்த மூட்டை.. பிரித்துப் பார்த்த நபர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி!!

545

திருச்சி….

திருச்சி ஸ்ரீரங்கத்தில் துணி மூட்டையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையை வீசிச்சென்ற தாய் யார்? என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கட்டிடம் அருகில் உள்ள புதர் பகுதி ஒன்றில் பை ஒன்று வீசப்பட்டு கிடந்துள்ளது.

இதனை அவதானித்த ஆட்டோ டிரைவர்கள் அதனை பிரித்துப் பார்த்த போது உள்ளே பெண் குழந்தை தொப்பிள் கொடியுடன் காணப்பட்டுள்ளது.


குழந்தையை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற காட்சியே இதுவாகும். இதுகுறித்து பொலிசார் விசாரணை செய்து, உண்மையான தாய் யார்? என்பதையும் தேடி வருகின்றனர்.