பூரி கட்டையாலேயே கணவனை “காலி” செய்த மதுரை கனிமொழி.. காரணத்தை கேட்டால் ஆடிப்போயிடுவீங்க!!

233

பூரிக்கட்டை, தோசைக்கல்லால் தாக்கியே, கணவனை கொலை செய்துள்ளார் மனைவி கனிமொழி.. என்ன நடந்தது மதுரையில்?

மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் 36 வயதாகிறது.. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் கார்த்திக்.. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.. அதற்கு பிறகு வெளிநாட்டுக்கு செல்லாமல், மதுரையிலேயே ஆட்டோ ஓட்டி வந்தார்.

கனிமொழி: இவருடைய மனைவி பெயர் கனிமொழி.. 30 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கார்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

ஓயாமல் மது போதையிலேயே இருப்பாராம். அதேபோல, வீட்டுக்கு வந்தாலும், மனைவியிடம் தகராறு செய்து, ரகளை செய்வதையே வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார்.. எப்போதெல்லாம் கனிமொழியிடம் தகராறு செய்கிறாரோ, அப்போதெல்லாம் குழந்தைகளையும் அடித்து சித்ரவதை செய்வாராம் கார்த்திக்.

இப்படித்தான் நேற்றைய தினமும் கார்த்திக், தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.. குழந்தைகளையும் கொடூரமாக தாக்கியிருக்கிறார்.

குடிபோதை: குழந்தைகளை ஈவிரக்கமின்றி அடிப்பதை கண்டு ஆத்திரமடைந்த கனிமொழி, கிச்சனுக்குள் சென்று சப்பாத்திக்கட்டையை எடுத்து வந்து கார்த்திகை சரமாரியாக வெளுத்திருக்கிறார்.


அப்போதும் கார்த்தியின் சேட்டை அடங்காததால், தோசைக்கல்லை கொண்டுவந்து தாக்கியிருக்கிறார்.. அப்போதும் கார்த்தியின் அட்டகாசம் எல்லைமீறவும், அரிவாள் மனையாலேயே அவரை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, அங்கேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, கார்த்திக்கின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கனிமொழியை கீரைத்துரை இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி கைது செய்து விசாரணையும் மேற்கொண்டார். அப்போதுதான், கனிமொழி போலீசாரிடம் நடந்த சம்பவத்தை ஒன்றுவிடாமல் கூறினார்..

அரிவாள்மனை: அதாவது, நேற்று மதியம் குடிபோதையில் வீட்டுக்கு வந்திருக்கிறார் கார்த்திக்.. இவரது மகளுக்கு 5 வயதாகிறதாம்.. அந்த குழந்தையின் தலைமுடியை பிடித்து இழுத்து, அரிவாள்மனையால் வெட்டி கொல்ல முயன்றிருக்கிறார். இதைப்பார்த்து பதறிப்போன கனிமொழி, கார்த்திகை தடுக்க முயன்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த கார்த்திக், கனிமொழியின் கழுத்தில் காலை வைத்து மிதித்துக்கொண்டே, 7 வயது மகனை பிடித்து தலையை சுவரில் முட்டவும் செய்திருக்கிறார். மகள், மகன் உயிரை காப்பாற்றுவதற்காகவே, சப்பாத்தி கட்டை, தோசைக்கல்லால் தலையில் சரமாரியாக தாக்கி கொன்றாராம் கனிமொழி.

கனிமொழி: இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, தற்காப்புக்காகவும், குழந்தைகளை காப்பாற்ற கார்த்திக்கை கனிமொழி அடித்ததில், கார்த்திக் இறந்துவிட்டார்.. ஏற்கனவே ஒருவருடன் தகராறு செய்து, கைதானவர்தான் இந்த கார்த்திக்.. சில வருடங்களுக்கு முன்பு இதே மதுரையில் வேறொரு சம்பவம் நடந்தது.. தன் மகளை கொடுமைப்படுத்திய கணவரை, கிரிக்கெட் மட்டையாலேயே மனைவி அடித்துக்கொலை செய்தார்.

மகளையும், தன்னையும் தற்காத்துக் கொள்ளவே, கணவரை கொலை செய்தார் என்று அந்த வழக்கை விசாரித்த அப்போதைய எஸ்.பி., அஸ்ராகர்க், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 100ன் கீழ் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, அப்பெண்ணை விடுவித்தார். அதுபோலவே, கார்த்திக் கொலை சம்பவத்திலும் கமிஷனர் லோகநாதன் தான் முடிவெடுக்க வேண்டும்” என்றனர்.