பெற்றோர்களே உஷார்.. ஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

47

தெலங்கானாவில் செகந்திராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் வழக்கம் போல் மதிய உணவை சாப்பிட்டான். சிறுவன் திடீரென மூச்சு திணறி இறந்தான்.

வீரென் ஜெயின் என்ற சிறுவன் மதிய உணவுக்காக வீட்டில் செய்த பூரிகளை சிறுவன் கொண்டு வந்திருந்தான்.

மாணவன் ஒரே நேரத்தில் மூன்று பூரிகளை சாப்பிட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பூரி மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், “மதியம் பள்ளியில் இருந்து எனக்கு போன் வந்தது.


எனது மகன் 3 பூரிகளை ஒரே நேரத்தில் சாப்பிட முயன்றதாகவும், மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறினர்.

உடனே மருத்துவமனைக்கு ஓடினேன். ஆனால் என் மகன் இறந்துவிட்டதாக கூறினார்கள். மகன் இறந்ததைக் கண்டு பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.