பெற்ற மகளையே இளைஞருக்கு இரையாக்கிய கொடூர தாய்.. அதுவும் ரூ.1,500 பணத்திற்காக!!

1166

கேரளாவில்..

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடையை சேர்ந்தவர் அகில்தேவ் (25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வினீஷா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அகில்தேவும், வினீஷாவும் மதுரைக்கு சென்று விட்டு ரயிலில் திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களுக்கு அதே ரயிலில் 13 வயது மகளுடன் திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணும், அகில்தேவும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகில்தேவ் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, அப்பெண்ணயும், மகளையும் கொச்சிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அவர் அழைப்பை ஏற்று அப்பெண் மகளுடன் கொச்சிக்கு வந்துள்ளார். அங்கு அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தயாராக இருந்த அகில்தேவ் தன்னை சந்திக்க ஓட்டலுக்கு வருமாறு கூறினார். இதையடுத்து இளம்பெண்ணும், அவருடைய மகளும் அங்கு சென்றனர். அப்போது 3 பேரும் ஓட்டல் அறையில் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் திடீரென்று அந்த பெண் தனது மகளை அகில்தேவுடன் தனியாக விட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.


அப்போது சிறுமி என்றும் பாராமல் அகில் தேவ் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து கதறி அழுதபடியே அறையை விட்டு வெளியே வந்த அந்த சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து தாயிடம் கூறினார். அதற்கு அவரோ அதற்காக தான் உன்னை இங்கு அழைத்து வந்தேன். அவருடன் நீ தனிமையில் இருக்க ரூ.1,500 -யை என்னிடம் கொடுத்து விட்டார் என தெரிவித்துள்ளார்.

தாய் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையில் இருந்தார். பின்னர் அகில்தேவ் அந்த சிறுமியை தன்னுடைய காதலியான வினீஷாவின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் இருந்த வினீஷாவின் பெற்றோர் அகில்தேவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர்.

இதனால் ரகசியமாக காட்டாக்கடை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் அங்கு வந்த போலீசார் அகில்தேவிடம் விசாரணை நடத்தியபோது சிறுமிக்கு நடந்த கொடூரம் வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த அகில்தேவ், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் மற்றும் அகில்தேவின் காதலியான வினீஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.