பேக்கரி ஓவனுக்குள் உடல் கருகி உயிரிழந்த இந்திய இளம்பெண் : கொலையா? பொலிசார் தகவல்!!

310

கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் பேக்கரி ஓவனுக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்த விடயத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

கனடாவுக்கு புலம்பெயர்ந்த குர்சிம்ரன் கௌர் (Gursimran Kaur, 19) என்னும் இளம்பெண்ணும் அவரது தாயும், Halifaxஇல் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் பணி செய்துவந்துள்ளார்கள்.

அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, மகளைக் காணாமல் தேடிய அவரது தாய், குர்சிம்ரனுக்கு போன் செய்ய, அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறது.

அப்படி தன் மகள் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்யமாட்டார் என்பதை அறிந்த அவரது தாய் மகளைத் தேடி அலைய, குர்சிம்ரன், ஆள் நடக்கும் அளவிலான ஓவன் ஒன்றிற்குள் உயிரிழந்துகிடந்தது தெரியவந்தது.

இந்நிலையில், குர்சிம்ரன் மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

அதாவது, பொலிஸ் விசாரணையில், குர்சிம்ரன் மரணம், கொலை அல்லது ஏதேனும் சதித்திட்டத்தின் விளைவாக நடந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.