போதைக்கு அடிமை… நண்பருடன் சேர்ந்து காதல் மனைவிக்கே பாலியல் தொல்லை கொடுத்த இன்ஜினியர்!!

814

ஆந்திராவில்..

ஆந்திரப் பிரதேச மாநிலம் காகிநாடா பகுதியைச் சேர்ந்தவர் அகிலேஷ் தர்மராஜ். இவர் பெங்களூருவில் கம்ப்யூடர் இன்ஜினயராக பணிபுரிந்து வருகிறார். இவர் 2019ஆம் ஆண்டில் மேட்ரிமோனி தளம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகி காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.

அந்த பெண் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஐடி ஊழியர் ஆவார். திருமணத்திற்குப் பின் தம்பதி இருவரும் எச்எஸ்ஆர் லே அவுட் பகுதியில் வசித்து வந்தனர். ஆரம்பத்தில் மனைவியுடன் ஆசையாக இவர் குடும்பம் நடத்தி வந்த நிலையில், சில மாதங்கள் கழித்து தான் உண்மை முகத்தை அகிலேஷ் வெளியே காட்ட தொடங்கியுள்ளார்.

கஞ்சா போதை பொருள்களுக்கு அடிமையான இவர் மனைவிக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இது அளவு மீறி செல்லத் தொடங்கியுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் வீட்டில் வைத்தே போதை பொருளை பயன்படுத்தி அகிலேஷ் தனது நண்பருடன் சேர்ந்து மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


மனைவியையும் போதை பொருளை பயன்படுத்துமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் வீட்டின் குளியல் அறை, படுக்கை அறைகளில் கணவர் அகிலேஷ் சிசிடிவியை பொருத்தி வைத்துள்ளது மனைவியை பிளாக் மெயில் செய்து வந்துள்ளார். இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் பயத்தில் அந்த பெண் வீட்டை விட்டு தப்பி பெற்றோர் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

இந்த விஷயங்களை வெளியே சொன்னால் இல்லாமல் செய்துவிடுவோம் என கணவரும் அவரது கூட்டாளி நண்பர்களும் பெண்ணை மிரட்டியுள்ளனர். அந்த பெண் தனக்கு நேர்ந்த அவலங்கள் குறித்து சுப்ரமணியபுரா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில்,

கணவர் அகிலேஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.