போலீஸ் அதிகாரி முதல் சாமானிய இளைஞர் வரை மேட்ரிமோனி மூலம் நைசா பேசி பணத்தை ஆட்டைய போட்ட பெண்!!

212

கேரள மாநிலம் பொய்னாச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஸ்ருதியை (35) சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் என்ற பெயரில் பல ஆண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்ததாக ஸ்ருதியின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, உடுப்பியில் தலைமறைவாக இருந்த ஸ்ருதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்ருதி கேரளாவை சேர்ந்தவர். மாப்பிள்ளை தேடும் வசதி படைத்த ஆண்களைக் கண்டுபிடித்து பேசுவதற்கு மேட்ரிமோனியல் இணையதளங்களைப் பயன்படுத்தி வருகிறார். பின்னர் அவர்களிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை எடுத்து ஏமாற்றி, தொடர்பை துண்டித்து வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இவர் விரித்த வலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் சாமானியர்கள் வரை பலர் விழுந்துள்ளனர். அவர்களில் கேரள போலீஸ் எஸ்ஐயும் ஒருவர். அவருடன் தொடர்பை ஏற்படுத்திய ஸ்ருதி, தன்னிடம் இருந்து 5 லட்சம் பணம் மற்றும் நகைகளை பறித்து எஸ்ஐ பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.

அந்த பெண்ணின் புகாரின் பேரில் எஸ்ஐ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகும் ஸ்ருதி இன்ஸ்டாகிராம், மேட்ரிமோனியல் போன்ற இணையதளங்களை பயன்படுத்தி போலீஸ் அதிகாரி, வருமான வரித்துறை அதிகாரி என்று பலரை ஏமாற்றி பணம், நகைகளை பறித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் பொய்னாச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் தன்னை இஸ்ரோ அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார். அதற்காக சில போலி ஆவணங்களை தயாரித்து அந்த இளைஞரிடம் காட்டி அவரிடம் இருந்து ஒரு லட்சம் பணம் மற்றும் பல தங்க ஆபரணங்களை திருடி தலைமறைவானார்.

இந்நிலையில், பாலியல் வழக்கில் சிறைக்கு சென்ற எஸ்.ஐ., ஜாமினில் வெளிவந்து, தான் ஏமாற்றப்பட்டதை அந்த இளைஞரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்ட அவர் நானும் ஸ்ருதியால் ஏமாற்றப்பட்டதாக கூறினார்.


இதையடுத்து ஸ்ருதியின் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மேல்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவரைப் பற்றிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்படி உடுப்பியில் பதுங்கியிருந்த ஸ்ருதியை போலீசார் கைது செய்தனர்.