பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 14 வயது பள்ளி மாணவி அர்ச்சனா, கடந்த வாரம் அலடகட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் குடும்பத்தினர் அவசர அவசரமாக இறுதி சடங்குகளை நடத்தி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் ஹாவேரி மாவட்டத்தில் மாணவி அர்ச்சனா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒரு வாரத்துக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹாவேரி மாவட்டம் ஹிரேகேரூர் தாலுகாவில் உள்ள மொரார்ஜி தேசாய் அரசு குடியிருப்புப் பள்ளியில் அர்ச்சனா என்ற மாணவி படித்து வந்தார்.
கடந்த வாரம் அலடகட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டார், மேலும் காவல்துறைக்கு தெரிவிக்காமல் குடும்பத்தினர் இறுதி சடங்குகளை நடத்தினர்.
அர்ச்சனா தனது மரணக் குறிப்பில் தனது வகுப்புத் தோழியான சோயா மற்றும் அவரது தாயார் தன்னைச் சித்திரவதை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார், அர்ச்சனாவின் தோழி சோயாவின் தந்தை அரிபுல்லா, குடியிருப்புப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இச்சம்பவத்திற்குப் பிறகு, பள்ளி நிர்வாகம் அர்ச்சனா, அரிபுல்லா மற்றும் ஊர் தலைவர்களின் குடும்பத்தினரை கூட்டத்திற்கு அழைத்தது. இந்த விஷயத்தை அடக்கம் செய்ய ஒப்புக்கொண்ட அர்ச்சனாவின் குடும்பத்திற்கும் சில கிராமவாசிகளுக்கும் இழப்பீடு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
விவாதத்தின்படி, குடும்பம் ரூ. 10 லட்சம் கேட்டது. பின்னர் இந்த இழப்பீடு பணத்தில் தங்களுக்கு பங்கு கிடைக்காத கிராம மக்கள் சிலர் இந்த தற்கொலைக் குறித்த தகவல் பரப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆலடகட்டியை சேர்ந்த கிராமவாசி ஒருவர் கூறியதாவது: “அர்ச்சனா பிரகாசமான, படுசுட்டியான புத்திசாலி மாணவி. அந்த மரணக் குறிப்பில் உள்ள விஷயத்தைக் கண்டு ஆத்திரமடைந்த கிராமத்து இளைஞர்கள் சிலர் அதை புகைப்படம் எடுத்தது சிறுமியின் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் எதிரான சான்றாக அமையும்.
மாணவியின் தற்கொலையை மறைத்த பள்ளி நிர்வாகம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று ஹாவேரியில் இருந்து போலீஸ் குழு அர்ச்சனா வசித்த கிராமம் மற்றும் குடியிருப்பு பள்ளிக்கு சென்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கிராம மக்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் அர்ச்சனாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.