மகன் இறந்த தேதியில் தாயும் தற்கொலை… தனியே தவிக்கும் கணவர், மகள்!!

260

காஞ்சிபுரம் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் ரிச்சர்ட் (வயது 37), மீனாட்சி (வயது 35). தம்பதியருக்கு 13 வயதில் ஜெஸ்ஸி என்ற மகளும், டோனி என்ற 12 வயது மகனும் உள்ளனர்.

ஒரகடம், மீனாட்சிதாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரிச்சர்ட் வேலை பார்த்து வருகிறார். ஜெஸ்சி சாலமங்கலம் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். டோனி ஆதனஞ்சரியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

சரியாக படிக்கவில்லை என பெற்றோர் திட்டியதால், கடந்த ஜூன் மாதம் (25.06.2024) மாலை 3:50 மணியளவில் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். ரிச்சர்ட், மீனாட்சி, ஜெஸ்ஸி ஆகியோர் டோனியின் மரணத்தைத் தாங்க முடியாமல் தவித்தனர்.

மேலும் மகன் இறந்த தேதியில் இருந்து மீனாட்சி வேலைக்கு செல்லாமல் வீட்டில் கதறி அழுதுள்ளார். மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கணவர் வேலைக்கு, மகள் பள்ளிக்கு சென்ற நிலையில், மகன் இறந்த அதே தேதியில் மீனாட்சி வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகனுக்குப் பிடித்த வெஜ் பிரியாணி, பிஸ்கட், முட்டை, மீன் போன்றவற்றைச் செய்துவிட்டு 35 வயது தாய் தற்கொலை செய்துகொண்டார்.இறந்து போன மீனாட்சியின் மகன் பாசத்தை என்ன சொல்வான் என அப்பகுதி மக்கள் வேதனையில் புலம்பினர்.

வளர்ந்த மகளும், கணவரும் தனியே தவித்து வருகின்றனர். மணிமங்கலம் போலீசார், மீனாட்சியின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.